அதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!

0
46

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரப்படுத்துவது முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்றினை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட 13 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

இப்போது இருக்கும் ஊரடங்கு இன்னும் தீவிரப்படுத்துவதோடு நோய்த்தொற்று பரவலை தடுப்பது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு அனைத்து கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது, அதோடு பொதுக்கூட்டங்கள் மற்றும் மற்ற அரசியல் சம்பந்தமான கூட்டங்களுக்கு தடை விதிப்பது போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பொது மக்களின் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வண்ணம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக அயல் நாட்டிலிருந்து தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கு உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கேட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், அது ஒரு பொது மக்களையும் இந்த நெறிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எல்லா கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் போன்ற 5 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.