தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது! முக்கிய கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

0
187

எதிர்வரும் சட்டசபை தேர்தல் அதிமுக திமுக என்று தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கும் மிக முக்கிய திருப்புமுனை தேர்தலாக கருதப்படுகிறது.ஏனென்றால் இந்த இரு கட்சிகளுக்குமே தலைமையேற்று இருந்த முக்கிய தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தற்சமயம் உயிருடன் இல்லை.ஆகவே இந்த இரு பெரும் கட்சிகளுமே புதிய தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்கள் கீழ் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆகவே புதிய தலைமைகளை ஏற்றிருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் சந்திக்கும் முதல் தேர்தலாக எதிர்வரும் சட்டசபை தேர்தல் இருக்கிறது. எனவே இரண்டு கட்சிகளின் தலைமைகளுக்குமே அந்தந்த கட்சிகளை இந்த தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. ஆகவே இரு கட்சிகளுமே மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.

அந்த விதத்தில், தேர்தல் தேதி அறிவித்த தேதியில் இருந்தே எதிர்வரும் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சிகள், நாளேடுகள், பத்திரிகைகள், என எல்லோரும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக ஜனநாயகக் கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் என்ற அமைப்பின் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் எதிர்வரும் தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி மறுபடியும் தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 80 ஆயிரம் நபர்களிடம் இந்த ஜனநாயகக் கூட்டமைப்பு அதோடு உங்கள் குரல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி எதிர்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி 111 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் எதிர்க்கட்சியாக அமரும் எனவும், அதிமுக தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாஜக கூட்டணி 122 இடங்களை வெற்றி பெற்று தமிழ்நாட்டிலே மறுபடியும் ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணி மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான கூட்டணி போன்ற கூட்டணிகள் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் சென்ற 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இதே ஜனநாயகக் கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் தன்னார்வ அமைப்பு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்ட தேர்தல் கருத்து கணிப்புகள் மற்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் போன்றவை மிகத்துல்லியமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெளியாகும் முடிவும் இந்த கருத்துக்கணிப்பில் வெளியிடப்பட்டிருக்கும் முடிவும் ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் எதிர்க் கட்சியான திமுக மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்து இருப்பதாக சொல்கிறார்கள். திமுக தேர்தல் என வந்துவிட்டாலே தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி பல்வேறு நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் தனக்கென ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அந்தக் கட்சிக்கு சாதகமாக அந்த கருத்துக் கணிப்புகளை மாற்றி வெளியிட்டு அதன் மூலமாக மக்களின் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவது இயல்பான ஒன்று. அது போன்ற வேலைகளை இப்போதும் அந்த கட்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.