போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
87
To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!
To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் விசாரணை செய்தது.

அப்போது நீதிபதிகள் கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி செயல்படும் அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.அதனையடுத்து அரசு ஊழியர்கள் அவர்களின் செயல் அரசாங்க சுற்றைக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்வதற்கும் சட்டத்தில் உரிமை இல்லை.மேலும் சட்டத்தை  மீறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு  அரசு சம்பளம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு செய்வது அவர்களை ஊக்குவிப்பது போன்றது போல உள்ளது இனி இது போல போராட்டங்கள் நடந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

author avatar
Parthipan K