டெட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களின் கவனத்திற்கு! தாள் 2 எக்ஸாம் தேதி வெளியீடு!

0
136
To the attention of those who applied to write the TET exam! Paper 2 Exam Date Released!
To the attention of those who applied to write the TET exam! Paper 2 Exam Date Released!

டெட் தேர்வு எழுத விண்ணபித்தவர்களின் கவனத்திற்கு! தாள் 2 எக்ஸாம் தேதி வெளியீடு!

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கு இந்த தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது மொத்தம் இரண்டு தாள் கொண்டுள்ளது.முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருந்தால் இடைநிலை ஆசிரியராக பணி புரியலாம் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்.இந்த தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகின்றது.

இந்த தேர்வுக்கு அறிவிப்பானது கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.மேலும் இந்த தேர்விற்கு இணைய வழியில் தான் விண்ணபங்கள் பெறப்பட்டது.ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளிற்கு 2 லட்சத்து 30,878 பேரும் மற்றும் இரண்டாம் தாளிற்கு 4லட்சத்து 1,886 பேரும் விண்ணபித்தனர்.தற்போது டெட் தேர்வானது இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்,தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டு தாள் 1 தேர்வானது கடந்த அக்டோபர்  மாதம் 16 முதல் 19 ஆம் தேதி வரை நடந்தது.மேலும் இதற்கான அட்மிட் கார்டு தேர்வுக்கு 15 நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்டது. மேலும் அதற்கான முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இரண்டாம் தாளுக்கான அறிவிப்பை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டெட் 2ஆம் தாள் தேர்வானது ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கணினி வழித் தேர்வெழுத உள்ள பட்டதாரிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு http://trb.inc.in என்ற இணையதளத்தில் வழியாக பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விரிவான தேர்வுக்கால அட்டவணை,தேர்வுக்கூட நுழைவு சீட்டு வெளியீடு உள்ளிட்ட விவரங்கள் ஜனவரி இரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K