தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

0
116

தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2300 நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.  இதனைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டம் செய்து வருகின்றனர்.

இதனை அடுத்து அமைச்சர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொரோனா கால நர்சுகளுக்கு பணி நீக்கம் இல்லை ஆனால் அவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.  2200 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணிநீக்கம் என்பது அரசின் நோக்கம் அல்ல. ஒப்பந்தப் பணி முடித்த நர்சுகளுக்கு மற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப் பணி வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் பணியாற்றிய தங்களுக்கு அதே மருத்துவத் தேர்வாணையத்தின் மூலம் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கு ஊறி சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுமார்    250- க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த செவிலியர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எத்தனை கெடுபிடிகள் வந்தாலும் எங்கள் போராட்டத்தில் பின்வாங்க மாட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று செவிலியர்கள் அறிவித்தனர்.

இதனை அடுத்து இன்று அதிகாலை 3 மணி அளவில் செவிலியர்களை எழுப்பிய காவலர்கள் அவர்களை மண்டபத்தை விட்டு வெளியேற்றினர்.  காவலர் கொண்டு வந்த பேருந்தில் ஏற மறுத்த செவிலியர்கள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழியெங்கும் கோஷங்களை எழுப்பியவாறு நடந்தே சென்றனர்.  மாற்றுவழியில் எங்கள் போராட்டம் தொடங்கும் என்றவாறு கலைந்து சென்றனர்.

சேலத்தில் மாற்று வழிப் போராட்டத்தை செவிலியர்கள் அறிவித்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள         டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்பி போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர்.