துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! 

0
218

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! 

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது.

துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த பகுதியில் ஏற்படும் பயங்கர நிலநடுக்கம் இதுவாகும்.

7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி சிரியா நாடுகளின் எல்லையில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதன் தாக்கம் அண்டை நாடான இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளில் உணரப்பட்டுள்ளது.கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். 

நிலநடுக்கத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்க துருக்கி மற்றும் சிரியா நாட்டு மீட்புப்  படையினர் களத்தில் இறங்கி மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலநடுக்கத்தால் இதுவரை 2300 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துருக்கியில் 912 பேர். சிரியாவின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 350 பேர் உயிரிழந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் அதன் உள்ளே நிறைய மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.