நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்!

0
70

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வார்டு வரையறை சரியில்லை என்று திமுகவால் குற்றம் சாட்டப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. ஆகவே இந்தத் தேர்தல் தற்சமயம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை பதிவு செய்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் இருக்கின்றன, ஆகவே தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற பகுதிகளில் வார்டு வாரியாக புகைப்பட வாக்காளர் பட்டியல், சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், மாநில அளவில் முதன்மை பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநில தேர்தல் ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய தகவல் மைய அலுவலர்களால் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றார்கள் இதில் முதன்மை தேர்தல் அலுவலர் அருள்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட ஆர்வலர்கள் பங்கேற்றார்கள்.