அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.பி பதவியை தூக்கி எறிந்த ரகசியம் இதுதானா?

0
89

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றியடைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவர்களுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

சென்ற 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தார் அவருடைய ஆதரவாளர்கள் பலர் வெற்றி பெற்ற நிலையில், வைத்திலிங்கம் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து ஒரு சில மாதங்களிலேயே அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் ஜெயலலிதா. அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில் தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மறுபடியும் ஒரத்தநாடு தொகுதியில் நின்று வெற்றி அடைந்திருக்கிறார் வைத்திலிங்கம்.

அதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவிய கேபி முனுசாமி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கேபி முனுசாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் இன்னும் நான்கு வருடங்கள் மீதம் இருக்கின்றன.வைத்திலிங்கத்திற்கு சட்டசபை உறுப்பினர் பதவி காலத்தைவிட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் மிகக் குறைவாகவே இருப்பதன் காரணமாக, அவர் முன்னரே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அதேசமயம் கேபி முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் இன்னும் நான்கு வருட காலங்கள் இருக்கின்றபோதும் அவர் சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கு விருப்ப படுகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் சட்டசபை உறுப்பினராக இருந்தவர்தான் மாநில அளவிலான அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்த இயலும், அதிமுகவின் சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பட்டியலிலும் இடம் பிடித்து கட்சியிலும் தன்னுடைய இடத்தை உறுதி செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.வைத்திலிங்கம், கேபி முனுசாமியும், அதிமுகவில் முக்கிய இடங்களை தக்க வைப்பதற்கு மாநில அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்த இருப்பதாகவும், அதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் சமீபத்தில் காலமானார் இப்போது இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக மாநிலங்களவைக்கு தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் திமுகவே மூன்று இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலையோடு செயல்பட்ட அதிமுகவின் 3 எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கின்றது. ஆகவே மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு இது ஒரு மாபெரும் இழப்பாக கருதப்படுவதாக சொல்லப்படுகிறது.