குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிடவில்லையா? அப்போ இந்த ரெசிபி செய்து கொடுங்கள்.!

0
89

குழந்தைகளை வெண்டைக்காய் சாப்பிட வைப்பது என்பது தலையால் தண்ணிகுடிக்க வைக்கும் செயலாக உள்ளது. வெண்டைக்காயில் அதிக அளவு ஊட்டசத்துகள் உள்ளன. அதனால், வாரத்தில் இருமுறை வளரும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் தருவது அவசியம். குழந்தைகளை விரும்பி வெண்டைக்காய் சாப்பிட வைக்க இந்த மாதிரி ரெசிபி செய்து கொடுக்கலாம்.

தேவையானவை:
வெண்டைக்காய் – 10 தயிர் – 1 1/2 கப் சிவப்பு மிளகாய் – 4 கடுகு – கால் தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

மசாலாவிற்கு

சிறிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 பூண்டு – 2 பற்கள் தேங்காய் துருவியது – 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி சீரகத்தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை :

வெண்டைக்காயை நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெண்டைக்காய்களை வதக்கி கொள்ளுங்கள். மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளுங்கள், அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில், எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அது காய்ந்ததும் கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

அதனுடன் வெண்டைக்காயை சேர்த்து கொண்டு கலந்து வைத்துள்ள தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார். இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.