பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்தால் சன்மானம்:!

0
78

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்தால் சன்மானம்:!

வேலூர் மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்துஆதாரத்தோடு கொடுப்பவர்களுக்கு 200 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் திடக்கழிவு மேலாண்மையை ஒழுங்குபடுத்தும் வகையில் வேலூர் மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர்,குப்பைகளை தரம் பிரிக்காதோர் மற்றும் பொதுவெளியில் வைத்து குப்பைகளை எரிப்போர் போன்றவர்களுக்கு தனித்தனியே அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதாவது பொது இடத்தில் குப்பையை கொட்டுவோருக்கு 500 ரூபாயும்,குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு 100 ரூபாயும்,வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயும், வணிக வளாகங்களுக்கு ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி வீட்டுமனையில் குப்பைகளை கொட்டுவோருக்கு 200 ரூபாயும்,வீட்டின் வெளியில் குப்பைகளை எரிப்போருக்கு 100 ரூபாயும் வணிக நிறுவனங்களுக்கு 200 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Pavithra