பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல்

0
102

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல்

பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 18 தேர்தல்கள் மற்றும் வியாழன் அன்று கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) வருடாந்திர பொதுக் கூட்டத்தில் KSCA செயலாளர் சந்தோஷ் மேனனுக்குப் பதிலாக ரோஜர் பின்னியின் பெயர் பிசிசிஐயின் வரைவு வாக்காளர் பட்டியலில் (பிசிசிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டது) இடம்பெற்றது. இவை அனைத்தும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி தலைவர் தேர்தலில் இடம்பெறுவார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வெளியாகியுள்ள தகவல்களின் படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான இந்தியாவின் பிரதிநிதியாக சவுரவ் கங்குலி இடம்பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அக்டோபர் 13 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் மற்றும் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அக்டோபர் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.