விராட் கோஹ்லியின் அதிரடி சதம்! வெற்றிக்கு உதவாமல் போனது!!

0
101
#image_title
விராட் கோஹ்லியின் அதிரடி சதம்! வெற்றிக்கு உதவாமல் போனது!
நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் இரண்டாவது முறையாக சதம் அடித்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை நழுவவிட்டது.
நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோஹ்லி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். பெங்களூரு.அணியில் அதிகபட்சமாக சதமடித்த விராட் கோஹ்லி 101 ரன்கள் சேர்த்தார். பிரேஸ்வெல் 26 ரன்களும் ராவத் 23 ரன்களும் சேர்த்தனர். நூர் அஹமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஷித் கான், முகமது ஷமி, யாஷ் தயால் மூவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 198 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியால் தொடக்க வீரர் சஹா 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய தொடக்கவீரர் சுப்மான் கில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய விஜய் சங்கர் அரை சதம் அடித்து 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதி வரை விளையாடி சதம் அடித்து 104 ரன்கள் அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய சுப்மான் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவரில் 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெற்றதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் கோப்பை கனவு இந்த ஆண்டும் கனவாகவே போனது.