கேமிரோன் கரீனின் அதிரடியான சதம்! பிளே ஆப் சுற்றுக்கள் நான்காவது அணியாக மும்பை தகுதி!!

0
126
#image_title
கேமிரோன் கரீனின் அதிரடியான சதம்! பிளே ஆப் சுற்றுக்கள் நான்காவது அணியாக மும்பை தகுதி!
நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வி பெற்றதை அடுத்து மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது.
நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரலசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்.செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடியாக விளையாடி மயங்க் அகர்வால் 83 ரன்களும், விவ்ரான்ட் சர்மா 69 ரன்களும் சேர்த்தனர். மும்பை அணியில் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
201 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் அவருடன் ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் அவர்களும் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். அதிரடியாக விளையாடி ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் சதம் அடித்து 100 ரன்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார்.  இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் குஜர்த் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெற்றதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேறியது.