கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் கூடும் நாள்!

0
121
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் கூடும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் கூடும் நாள். நீங்கள் எடுக்கும் காரியங்கள் சிறப்பாக செயல்படுவதால் முன்னேற்றமான பாதை கண்டிப்பாக கிடைக்கும்.

குடும்ப உறவு பலமாக உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான சந்தோஷம் இருக்கும். பொருளாதாரம் இரட்டிப்பாக வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தன வரவு ஒன்று கிடைப்பதால் மன சந்தோஷத்தோடு இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வித்திறன் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டுமே என்ற கவலையோடு செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தன வரவு ஒன்று வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

author avatar
Selvarani