எண்ணெய் பசையில் இருந்து விடுபணுமா?? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

0
117
#image_title

எண்ணெய் பசையில் இருந்து விடுபடனுமா?? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

உங்களுக்கு முகத்தில் எண்ணெய் சருமமா? இதை பாருங்கள்.நம்ம ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்கின் இருக்கும்.

அதுவே எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு அதிக பிரச்சனை இருக்கும். அதனாலேயே அவங்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படும்.

முக்கியமா அவர்களுக்கு முகப்பிரச்சினைகள், கரும்புள்ளிகள், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

1: சுடுதண்ணீர்  எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு பொருந்தவே பொருந்தாது. நீங்கள் மிதமான சூட்டில் குளித்தால் போதும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

2: எண்ணெய் சருமம் இருப்பவர்கள் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி இது போன்ற உணவுகள் சேர்க்கக்கூடாது ஏனெனில் இதில் அதிக கொழுப்புகள் இருக்கிறது ஆனால் நம் சருமத்தில் அதிக எண்ணெய் பிரச்சனை வரும். அதனால் முகப்பருவம் கூட வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

3: நம் முகத்தில் எண்ணெய் இல்லாமல் வேண்டுமானால் மாயிஸ்சரைசர் கிரீம் கண்டிப்பாக தேவைப்படும் அதில் எண்ணெய் இல்லாத மாயிஸ்சரைசர் தான் போட வேண்டும். இது ஒரு சிறந்த வழி யாகும்.

4: எண்ணெய் சருமம் இருப்பவர்கள் கண்டிப்பாக வாரத்தில் இரண்டு முறை ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும். உங்களுடைய முகத்துக்கு தகுந்தவாறு ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும் அது நம்மளுடைய டெத் செல்சை தவிர்க்கும்.

5: இயற்கையான பொருள் என்றால் முல்தானி மெட்டி தான் அதில் இயற்கை ஆகவே ஆண்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும்.

எண்ணெய் பசயை நீக்க மட்டும் அல்ல நம் முகத்திற்கு நல்ல பொழிவை தரும். எனவே முல்தானி மெட்டியை ஃபேஸ் மாஸ்க் போல் போட்டு நம் அழகை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

இதுவே என்னை சருமம் இருப்பவர்கள் தினமும் செய்து வந்தால் அவர்களுக்கு எண்ணெய் சருமம் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

author avatar
Parthipan K