காய்ந்த உதட்டை ரோஜா போல சிவப்பாக மாற்ற வேண்டுமா!! இதோ அதற்காக சில டிப்ஸ்!!

0
69

காய்ந்த உதட்டை ரோஜா போல சிவப்பாக மாற்ற வேண்டுமா!! இதோ அதற்காக சில டிப்ஸ்!!

காய்ந்து போன.உங்கள் உதட்டை ரோஜா பூ போல சிவப்பு நிறமாக மாற்றுவதற்கு சில அருமையான எளிமையான சில டிப்ஸ் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக உதடுகள் காய்ந்து போவது, உதடு வெடிப்பு ஏற்படுவது ஆகியவை பல காரணங்களால் ஏற்படும். ஒரு சிலருக்கு காய்ச்சல் காரணமாக உதடு வெடிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு சத்து குறைபாடு காரணமாக உதடு வெடிப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு பருநிலை மாற்றம் காரணமாக அதாவது குளிர்காலங்களில் உதடு வெடிப்முகள் ஏற்படும். இதனால் முகத்தின் அழகு பாதிக்கும். இதை சரி செய்வதற்கு சில எளிமையான இயற்கையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

காய்ந்த உதடு ரோஜா போல மாறுவதற்கு சில டிப்ஸ்…

* காய்ந்த உதடு சிவப்பா மென்மையாக மாறுவதற்கு சர்க்கரையும் ஆலிவ் எண்ணெயும் போதும். சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு பின்னர் அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் விட்டு நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை உதட்டில் தேய்த்து விட்டு 5 நிமிடங்கள் உதட்டை மென்மையாக தேய்க்க வேண்டும். பின்னர் கழுவிடலாம்.

* தினமும் இரவில் தூங்கச்செல்லும் முன்னர் உதட்டில் தேன் தேய்த்துக் கொண்டு படுத்தால் உதட்டு வறட்சி நீங்கி ஈரப்பத்துடன் காணப்படும்.

* தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் உதட்டில் நெய்யை தேய்த்துக் கொண்டு தூங்கச் செல்லலாம்.

* கீரின் டீ தயாரித்த பின்னர் அதன் பை அல்லது இலைகளை தூக்கி போடாமல் அதைக் கொண்டு உதட்டுக்கு மசாஜ் செய்யலாம். இதனால் உதடு வெடிப்புகள் குணமாகும்.

* தேங்காய் எண்ணெயை உதட்டில் தினமும் தேய்த்து வந்தால் உதடு அழகு பெறும். மற்றும் உதடு ஆரோக்கியம் அடையும்.

* ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு ஒன்றாகக் கலந்து அதை இரவு தூங்கச் செல்லும் முன் உதட்டில் தேய்த்துக் கொண்டு தூங்கலாம்.

* உதடு வெடிப்புகள் நீங்கி ஆரோக்கியமாக இருக்க வெள்ளரிக்காயின் தோலை நீக்கி பின்னர் இதன் சாறு எடுத்து உதட்டில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்த பின்னர் கழுவினால் உதடு ஆரேக்கியம் பெறும்.

* சிறிது தேன் எடுத்து அதில் ரோஸ் வாட்டர் சிறிதளவு கலந்து உதட்டில் தடவ வேண்டும். பின்னர் நிமிடங்கள் கழிந்து கழுவி விடலாம். இதனால் உதடு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உதடு வெடிப்புகள் ஏற்படாது.