தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா?? அப்போ இதை இரவில் குடிங்க!!

0
46

தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா?? அப்போ இதை இரவில் குடிங்க!! 

எப்போதும் நாம் இரவில் தூங்கியதும் மறுநாள் காலை சுறுசுறுப்பாக எழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் சில காரணங்களால் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. இரவில் எவ்வளவு களைப்பாக தூங்கினாலும் மறுநாள் காலை புத்துணர்ச்சியாக எப்படி எழுந்து கொள்ள
வேண்டும் என்பதை பார்ப்போம்.

** பொதுவாக இரவில் எப்போதும் டீ குடிக்க கூடாது.

** டீயில் இருக்கும் காஃபைன் இரவு தூக்கத்தை கெடுக்கும்.

** புதினா டீயில் காஃபைன் இருக்காது. என்பதோடு இரவு தூக்கத்தையும் கெடுக்காது. எனவே அதை தயாரித்து பருகுவது நல்லது.

** நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவும்.

** காலையில் ஏற்படும் சோர்வு இருக்காது.

** வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

** தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவும்.

** நெஞ்செரிச்சல் தொல்லை நீங்கும்.

தினமும் புதினா டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1.மன அழுத்தம் குறையும்

2. செரிமான பிரச்சனை நீங்கும்.

3. உடல் எடையை குறைக்கிறது.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

5. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

6.காயங்களை குணப்படுத்துகிறது.
முக அழகை மேம்படுத்துகிறது.

புதினா டீ செய்யத் தேவையான பொருட்கள் :

புதினா இலை – 7
தேயிலை – ஒரு டீஸ்பூன்
தேன் அல்லது பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்
பால் – கால் டம்ளர்

முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

இவை பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

நீங்கள் விரும்பினால் பால் சேர்க்கலாம்.