சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இதை மறந்தால் ரூ1000 அபராதம்! அதிரடி வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!

0
77

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இதை மறந்தால் ரூ1000 அபராதம்! அதிரடி வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வாகன திருத்த சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.விபத்துகளை குறைக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்ட வாகன திருத்த சட்டத்தில்,வேகமாக வாகனத்தை ஓட்டி செல்வது தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி செல்வது போன்று பல்வேறு திருத்தங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்திருக்கும் கொண்டுவரப்பட்டு ஆபராத தொகையை உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அபராத தொகை உயர்வானது தமிழ்நாட்டில் நேற்றிலிருந்து அமலுக்கு வந்தது.இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் தலைக்கவசம் அணியாதவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.மேலும் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் ஷாஜகான் விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அதன்படி சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை,ராசிபுரம், மல்லூர்,ஆண்டலூர் கேட் உள்ளிட்ட பல முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.எனவே நாமக்கல்லில் இருந்து சேலம் வரும் மக்களும் சேலமிருந்து நாமக்கல் செல்லும் மக்களும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறும்,வாகன விதிகளை பின்பற்றும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Pavithra