தனித்துவிடப்பட்ட தமிழகத்தின் முக்கிய கட்சி! தேர்தல் புறக்கணிப்பா?

0
82

தேமுதிக கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது ஆனால் அந்த தேர்தலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருதாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்த கட்சி அந்தத் தேர்தலில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அப்போது அந்த கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் இருந்தது அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல வரவேற்பு காணப்பட்ட நிலையில் அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 29 தொகுதிகளை வெற்றியடைந்து எதிர்க்கட்சியாக முதல்முறையாக சட்டசபைக்கு ள் நுழைந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அந்த கட்சி தன்னை இணைத்துக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாயிரத்தி 16 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டது அதில் படுதோல்வியை சந்தித்தது இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை தவிர்த்து அதன் பிறகு தேமுதிக சந்தித்த அனைத்து தேர்தலிலும் கிடைத்த தொடர் தோல்விகள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்சியின் தமிழகத்தின் வாக்கு சதவீதம் குறைய தொடங்கியது ஆனால் இதனை அந்த கட்சியின் தலைமை உணரவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது அந்த கட்சிக்கு தமிழகம் முழுவதிலும் வெறும் 2 சதவீத வாக்குகள் தான் இருக்கிறது அப்படி இரண்டு சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு மிக அதிக தொகுதிகளை எதிர்பார்த்து அதன் காரணமாக அதிமுக மற்றும் திமுக போன்ற தமிழகத்தின் பெரிய கட்சிகள் தேமுதிகவை நிராகரித்துவிட்டது இதனால் டிடிவி தினகரன் அணி பக்கம் செல்லலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தது திமுக இருந்தாலும் அங்கேயும் உடன்பாடு ஏற்படவில்லை அதனை தொடர்ந்து கமல்ஹாசன் பக்கம் செல்வதற்கு முயற்சி செய்தது இருந்தாலும் அங்கேயும் சரியான பலன் கிடைக்கவில்லை ஆகவே தேமுதிக தனித்து விடப்பட்டது.

இப்பொழுது அந்த கட்சி தனித்து போட்டியிடலாமா அல்லது தேர்தலில் இருந்து ஒதுங்கி விடலாமா என்ற ரீதியில் யோசனை செய்து வருவதாக சொல்கிறார்கள் ஏனென்றால் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணமில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் அப்படி இருக்கையில் ஒரு வேலை தனித்துப் போட்டியிட்டால் செலவுகள் அதிகமாக அதோடு வீம்புக்கு செலவு செய்து போட்டியிட்டாலும் நாம் வெற்றி பெறுவது கடினம் அவ்வாறு அசிங்க படுவதை விட தேர்தலில் இருந்து ஒதுங்கி விடலாம் என்ற யோசனையையும் தேமுதிக தலைமை செய்துவருவதாக சொல்கிறார்கள்.