நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா?

0
88

நெல்லை to சென்னை தாமிரபரணி எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கப்படுமா?

நெல்லை-தென்காசி ரெயில் பாதை ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகள் முடிவு அடைந்து விட்டது. இப்பாதையில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு, இக்கோரிக்கை இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

தென்மாவட்டத்தின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தொடர் வலியுறுத்தல் மற்றும் பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நெல்லையில் இருக்கும் 2 ரெயில்களை தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே மண்டல உறுப்பினர் பாண்டியராஜா அவர்கள் கூறுகை‌யி‌ல் :- நெல்லை- தென்காசி வழித்தடத்தில் மின்மயமாதல் பணிகள் நடைபெற்று வருகிறது, வீரவநல்லூரில் துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைப்பெறுகிறது. இந்த வழியில் இரயில்களின் வேகம் 70 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோமீட்டராக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாவூர்சத்திரம், கடையம், அம்பை பகுதியில் உள்ள சுற்று வட்டார மக்களுக்கு சென்னைக்கு ரெயில்கள் இல்லாத காரணத்தால் தென்காசி ரெயில் நிலையம் அல்லது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு செல்லவேண்டியதுள்ளது. இதனால் இப்பாதையில் நெல்லையில் இருந்து விரைவு ரெயில் இயக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காக இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K