பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?

0
93

பெண்கள் அதிகளவில் மேக்கப் போடுவதையும், ஒழுங்கற்ற ஆடை அணிந்திருப்பதையும் கண்டறிய தெருக்களில் ரோந்து படைகளை வட கொரிய அரசு அமைத்துள்ளது.

பொதுவாக பெண்கள் அனைவருக்குமே மேக்கப் போடுவது என்றால் மிகவும், சிலர் கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்த விரும்பமாட்டார்களே தவிர மற்றபடி அவர்களும் ஏதேனும் இயற்கையான முறையில் தங்களை அழகுபடுத்தி கொள்ளவே விரும்புவார்கள். தங்களை அழகுபடுத்தி கொள்வதில் பெண்களுக்கு மட்டுமே நாட்டம் உள்ளது என்று சொல்லிவிட முடியாது மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் அந்த எண்ணம் பெண்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும் அவ்வளவுதான். விதவிதமான மேக்கப் பொருட்களை பயன்படுத்தி தங்களது அழகை மெருகேற்றி கொள்ளும் பெண்களை அந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும், அப்படிதான் ஒரு நாட்டின் அதிபர் உத்தரவிட்டு இருக்கிறார்.NO Lips No Kiss Sign. Red Lipstick Kiss with Teeth on White Background.  Realistic Vector Illustration. Image Trace Stock Vector - Illustration of  entrance, concept: 124622217

எந்த நாட்டு அதிபர் இப்படி உத்தரவினை பிறப்பித்தார் என்றால் வட கொரிய அதிபர் கிம்-ஜாங் உன் தான் இந்த அதிரடி விதிமுறையை விதித்துள்ளார், வட கொரிய பகுதியில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த அரசு மக்களுக்கு பலவித அதிர்ச்சிகரமான கட்டுப்பாடுகளையும் விதித்து சர்வாதிகாரம் செய்து வருகிறது, அதில் ஒன்று தான் மேக்கப் போடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும். குறிப்பாக பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது ஏனெனில் சிவப்பு நிறம் முதலாளித்துவத்தன்மையை வெளிப்படுத்துகிறதாம் அதனால் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, வேண்டுமென்றால் வெளிர் நிறங்களில் லிப்ஸ்டிக் போட்ட்டுகொள்ளலாம்.Taking a Closer Look at Allowed Health and Beauty Ingredients in the EU and  U.S. - The RangeMe Blog

மேலும் பெண்கள் அதிகளவில் மேக்கப் போடுவதையும், ஒழுங்கற்ற ஆடை அணிந்திருப்பதையும் கண்டறிய தெருக்களில் ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தலைக்கு சாயம் பூசுவதற்கும், தலைமுடியை விரித்து போட்டு வெளியில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, பெண்கள் தலைமுடியை ஒழுங்காக மடித்து கட்டிக்கொள்ள வேண்டுமே தவிர முடியை விரித்து போடக்கூடாது. அதுமட்டுமல்லாது செயின் மற்றும் மோதிரம் போன்ற எவ்வித அணிகலன்களையும் பொதுவெளியில் அணிந்து செல்லக்கூடாது மற்றும் வட கொரியாவில் தயார் செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களை மட்டும் தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தவேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Savitha