தோஷமெல்லாம் நீக்கும் ஆடிக்கிருத்திகை; கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள்!

0
187

சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ்  பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை தேடித்தரும்.

திருச்செந்தூர் திருப்புகழ்:

“விறல்மார னைந்து மலர்வாளி சிந்த

மிகவானி லிந்துவெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற

வினைமாதர் தந்தம்வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

குறைதீர வந்துகுறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து

வழிபாடு தந்தமதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச

வடிவே லெறிந்தஅதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு

மடியா ரிடைஞ்சல்களைவோனே

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து

லைவா யுகந்தபெருமாளே”.

இப்பாடலை முருகன் முன்னின்று பாடினால் கூடாத திருமணங்கள் கைகூடி உங்கள் வாழ்வில் மணவாழ்வு பெறுவீர்கள்.

author avatar
Kowsalya