கோதுமை மாவில் ஹெல்த்தி நூடுல்ஸ் வீட்டிலேயே செய்யலாம்!! குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

0
25
#image_title

கோதுமை மாவில் ஹெல்த்தி நூடுல்ஸ் வீட்டிலேயே செய்யலாம்!! குழந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுப் பொருளில் ஒன்று நூடுல்ஸ்.கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் இந்த நூடுல்ஸ் மற்றும் அதனுடன் வரும் மசாலாக் கலவைகள் உடலுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் கோதுமை மாவை வைத்து நூடுல்ஸ் செய்வது குறித்த முழு விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு – கப்

எண்ணெய் –

உப்பு – தேவையான அளவு

குடை மிளகாய் – 1

கேரட் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி

வெங்காயம் – 2

முட்டை – 1

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

கரமசால் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.பின்னர் 1 தேக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பின்னர் இந்த மாவை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

இதனிடையே பெரிய வெங்காயம்,குடைமிளகாய்,கேரட் உள்ளிட்டவற்றை நறுக்கி கொள்ளவும்.

ஒரு தட்டில் கோதுமை மாவை தூவி விடவும்.பின்னர் முறுக்கு பிழியும் மிஷினில் சிறு சிறு ஓட்டை இருக்கும் தட்டு வைத்து தயார் செய்து வைத்துள்ள கோதுமை மாவை போட்டு பிழிந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து தயார் செய்து வைத்துள்ள கோதுமை நூடுல்ஸை போட்டு 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும்.

பின்னர் அந்த கோதுமை நூடுல்ஸில் உள்ள தண்ணீரை வடிகட்டிவிட்டு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் இஞ்சி,பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,குடைமிளகாய்,கேரட் உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்கவும்.பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

அதன் பின் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விடவும்.பின்னர் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,கரமசால் தூள் 1/2 தேக்கரண்டி மற்றும் மிளகு தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.

அதன் பின் கோதுமை நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி விடவும்.வாசனைக்காக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கலாம்.