முழு ஊரடங்கு! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

0
95

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த முழு வருடங்கள் உணவகத்தில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல அம்மா உணவகம் தொடர்ச்சியாக செயல்படும் என்றும், சாலையோர உணவகங்கள் திறக்கப்பட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களை தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது, எல்லா தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களும், இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை அதே போல அத்தியாவசிய துறைகளை தவிர்த்துவிட்டு மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் காய்கறி,மளிகை மற்றும் இறைச்சி கடைகள், நியாயவிலை கடைகள், தேநீர் கடைகள் 12 மணிவரை இயங்கலாம் ஆனால் தேனீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.தற்சமயம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இருக்கின்ற இந்த ஊரடங்கிற்கு மக்கள் எல்லோரும் கட்டாயமாக ஆதரவு தரவேண்டும், மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த நோய்த்தொற்று பரவலை ஒழிக்க இயலும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், முழு ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து சென்னையில் சுமார் பத்தாயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 200 பகுதிகளில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் மற்றும் 118 இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 360 பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் .சென்னையில் 35 மேம்பாலங்கள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.