வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது – ஜீ கே வாசன்!

0
93
#image_title
தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி கே மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்டது. இதன் தேர்தல் சின்னமாக மிதிவண்டி சைக்கிள் உள்ளது.
2001 ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி கே வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002 ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.
இக்கட்சி மீண்டும் 2014ல் ஜி கே வாசனால் மறுதொடக்கம் செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது, ஆனால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தாமாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் கூட்டணியிலிருந்து விலகியது தாமாக.
2019- ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 – சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் தேர்தலில் தோல்வியையே சந்தித்தது. இருப்பினும் அதிமுக – பாஜக கூட்டணியில் தாமாக உள்ளதால் வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இப்படி தாமகாவின் வரலாறு அமைந்தாலும் வாசனுடன் பல வருட காலம் அவருடன் பயணித்து வரும் அவரது தொண்டர்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்றளவும் மாறாமல் உள்ளது குறித்து வாசன் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஜி ஆர் வெங்கடேசனின் மணிவிழாவில் உருக்கமாக பேசினார்.
அரசியலை பொறுத்தவரை எந்த தலைவர்களிடமும் ஆதாயம் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னோடு பலர் பயணிக்கிறார்கள். அந்த நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஜீ கே வாசன் இவ்வாறு கூறியிருப்பதன் அர்த்தத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்க்கும் போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாசனை தங்களது கட்சியில் இணைத்தோ அல்லது மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து மத்திய அமைச்சர் பதவி தர பாஜக முடிவு செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.