ஆன்லைன் மூலம் 15 லட்சம் மோசடி! தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு! 

0
213
#image_title

ஆன்லைன் மூலம் 15 லட்சம் மோசடி! தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு! 

மர்ம நபர்கள் செய்த ஆன்லைன் மோசடியால் தொழிலதிபர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்ஏஎல் பகுதியை சேர்ந்தவர் மகாதேவா. இவர் தொழிலதிபர். சில மாதங்களுக்கு முன்பு செல்போனுக்கு 2 மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் மகாதேவனுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் விழுந்துள்ளதாகவும் அதை நீங்கள் பெற வேண்டுமெனில் வரியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்று நம்பிக்கை தரும் விதமாக மகாதேவனிடம் பேசி உள்ளனர்.

மேலும் பணம் செலுத்துவதற்காக வங்கி கணக்கு எண்ணையும் அவரின் செல்போனிற்கு அனுப்பியுள்ளனர். இதை நம்பிய மகாதேவா அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக 15 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த பரிசுப் பொருட்களும் வரவில்லை.  மர்ம நபர்களும் தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளனர்.

அதன் பின்னரே மகாதேவாவிற்கு மர்ம நபர்கள் பரிசு விழுந்ததாக கூறி 15 லட்சத்தை மோசடி செய்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் யாரும் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எச்ஏஎல் பகுதி  போலீசார் மகாதேவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.