கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…

0
34

 

கடந்த 15 ஆண்டுகளில் 1705 பேர் உடல் உறுப்பு தானம்… மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி…

 

கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் 1705 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சென்னையில் உள்ள இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்.பேட்டி அளித்த மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசின் கீழ் மூளை சாவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டு பேசினார்.

 

மேலும் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் “2008ம் ஆண்டுக்கு பிறகு 2015ம் ஆண்டு திமழக அரசின் மூளை சாவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டமானது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

 

கடந்த 15 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 1705 ஆகும். தானம் செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 6247 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த உறுப்புகள் தவிர 2500 கண்களும் தானமாக பெறப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணி அவர்கள் “தமிழ்நாட்டில் மட்டும் தான் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 22 லட்சம் ரூபாய் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.