ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!

0
70

ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!

 

ஆன்லைன் ரம்மி போன்ற அன்லைன் தொடர்பான சூதாட்ட பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் பல வகையான சேவைகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

ஜிஎஸ்டி கவுன்சலின் 50 வது குட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூலை11) நடைபெற்றது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி தொடர்பான திருத்தங்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

 

இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரையின்படி ஆன்லைன் பந்தயங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் “ஆன்லைன் பந்தயங்கள், ஆன்லைன் கேமிங், ஆன்லைன் ரம்மி, குதிரைப் பந்தயம், கேசினோக்கள், ஆன்லைன்.சூதாட்டங்கள் மூலமாக கிடைக்கும் மொத்த வருவாயின் மீது 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

மேலும் இன்னும் பிற சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி

 

* புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சில அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி இல்லை.

 

* தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி இல்லை.

 

* செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை.

 

* செயற்கை ஜரிகைகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட பருத்திக்கான பழைய ஜிஎஸ்டி பாக்கி இரத்து செய்யப்பட்டுள்ளது.

 

* திரையரங்குகளில் விற்கப்படும் நொறுக்கு தீணிகளுக்கு முன்பு 18 சதவீதமாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி தற்பொழுது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.