ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
76
35 kg of plastic waste in the stomach of a Jallikattu cow? Shock waiting for the doctor!
35 kg of plastic waste in the stomach of a Jallikattu cow? Shock waiting for the doctor!

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகிறது. தற்பொழுது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கூட மஞ்சப்பை என்ற திட்டத்தை முன் கொண்டு வந்தது. இதைக் கொண்டு வந்ததன் முன்னணி நோக்கமே மக்கள் யாரும் பிளாஸ்டிக் பைகளில் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான். குறிப்பாக மலைப்பகுதிகளில் அவற்றின் அழகை கெடுக்கும் வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து விட்டு கண்ட இடங்களில் வீசி செல்கின்றனர். அதனால் அப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கடுமையாக தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் நகர்ப்புற மக்கள் பிளாஸ்டிக் பை இன்றி இருப்பதை கடினமாகவே உணர்கின்றனர். அவ்வாறு மக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் விளைவு பற்றி சிறிதும் அறியாமல் தான் இன்றளவும் உள்ளன. அவ்வாறு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களை ஆடு மாடு போன்றவை சாப்பிட்டு விடுகிறது. இவ்வாறு பிளாஸ்டிக் பொருள்களை சாப்பிடும் மாடுகளால் மேற்கொண்டு தீவனம் சாப்பிட முடிவதில்லை. தற்பொழுது மருத்துவர்களையே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் என்ற பகுதியில் வசிப்பவர் தான் சிரஞ்சீவி. இவர் ஒரு காளை மாடு வளர்த்து வருகிறார். சில மாத காலமாகவே இந்த மாட்டு எந்த ஒரு தீவனமும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாட்டின் வயிறும் வீக்கமடைந்து காணப்பட்டுள்ளது. மாட்டை பரிசோதனை செய்ய சிரஞ்சீவி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது சோதித்த மருத்துவர்கள் பெருமளவு வியப்படைந்தனர். ஏனென்றால் மாடு பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டதால் அதன் வயிறு வீக்கம் அடைந்து உள்ளது.

மேலும் மருத்துவர்கள் உடனடியாக அந்த மாட்டிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். அறுவை சிகிச்சை மேற்கொண்டு மாட்டின் வயிற்றில் இருந்து சுமார் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாட்டின் வயிற்றில் சாவி, ஊசி ,பிளாஸ்டிக் பைகள் என பலவற்றை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தி விட்டு இவ்வளவு பெரிய விபரீதத்தை வாயில்லா ஜீவன்கள் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை அறிந்து மக்கள் இனியாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.