இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

0
151
#image_title

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

 

கடந்த 48 மணிநேரத்தில் அதாவது இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த நான்கு இளம் மருத்துவர்கள் இறப்பிற்கு பணி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

 

கடந்த இரண்டு நாட்களில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் நிறைவு செய்த 24 வயதுடைய மருத்துவர் தனுஷ், சென்னையில் தனியார் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் கவுரவ் காந்தி(46), தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 38 வயதுடைய விஜய் சுரேஷ் கண்ணா, திருச்சி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சதீஸ் குமார்(41) ஆகிய நான்கு மருத்துவர்களும் பணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களுடைய இறப்பு மருத்துவத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக தேசிய நலவாழ்வு திட்டத்தின் விபத்து காய சிகிச்சை ஒருங்கினைப்பு அதிகாரியும் முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணருமான ஜான் விஸ்வநாத் அவர்கள் “மருத்துவத்துறையில் இருவேறு நிபந்தனையின் கீழ் மருத்துவர்கள் ஓய்வு இன்றி வேலை செய்கின்றனர். மருத்துவமனையின் கட்டாயத்தின் அடிப்படையிலும் மருத்துவமனைகளின் பெயர், பணம், புகழ் ஈட்டுவதற்காகவும் மருத்துவர்கள் ஓய்வின்றி வேலை செய்து வருகின்றனர்.

 

மருத்துவர்கள் தினமும் 14 மணிநேரம் பணியாற்றுவதால் மன அழுத்தம் அதிகரிக்கின்றது. மன அழுத்தம் அதிகரிப்பதால் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இதயத் துடிப்பு 90ல் இருந்து 150 ஆக அதிகரிக்கின்றது. பெரும்பாலான மருத்துவர்கள் இதய பரிசோதனை மேற்கொள்வது இல்லை. இதானல் மருத்துவர்கள் எதிர்பாராமல் உயிரிழக்கின்றனர்.

 

தமிழகத்தில் உயிரிழந்த நான்கு மருத்துவர்களுக்கும் புகைப் பழக்கமோ மதுப் பழக்கமோ இல்லை. இவர்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாகவும் கட்டுக் கோப்புடனும் இருந்தவர்கள். இவர்கள் திடீரென்று இறந்தது அதிர்ச்சி அளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.