51-ம் ஆண்டுக்கான கேரள சினிமா விருதுகள் அறிவிப்பு.!! வெளியான முழுப்பட்டியல்.!!

0
107

கேரள அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் 51-வது ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்தினம் பணிபுரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகளுக்கு சுமார் 80 திரைப்படங்கள் போட்டியிட்டன.

இதில் சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், சிறந்த கலைநயமிக்க திரைப்படமாக ஐயப்பனும் கோஷியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள்;

சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்)

சிறந்த நடிகை: அன்னா பென் (கப்பேலா)

சிறந்த திரைப்படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)

சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம்: அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)

சிறந்த இயக்குநர்: சித்தார்த் சிவா (என்னிவர்)

சிறந்த கதாசிரியர்: ஜியோ பேபி

சிறந்த அறிமுக இயக்குநர்: முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)

சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)

சிறந்த இசையமைப்பாளர்: எம் ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)

சிறந்த பாடகர்: ஷபாஸ் அமான்

சிறந்த பாடகி: நித்யா மம்மென்

சிறந்த பாடலாசிரியர்: அன்வர் அலி

சிறந்த கலை இயக்குநர்: சந்தோஷ் ஜான்

சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள்: ஷோபி திலகன், ரியா சாய்ரா

பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு: நான்ஜியம்மா