கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

0
182

ஐ.நா.சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே கொரோனாவுக்கான தடுப்பூசியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் எல்லா நாடுகளில் உள்ள மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமாகும். ஏதாவது ஒரு நாட்டுக்கு கிடைக்காமல் போனாலும் கொரோனாவின் அச்சுறுத்தலை இந்த உலகம் தொடர்ந்து சந்திக்க வேண்டி இருக்கும். ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு கிடைக்காமல் போனால் அந்த நாடுகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும்.
எனவே தடுப்பூசி தயாரிக்கும் நாடுகள் அனைத்து நாட்டு மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படவேண்டும். இது தொடர்பான நடைமுறைகளும், உடன்பாடுகளும் உருவாக்கப்படும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

Previous articleஏழுமலையான் கோவிலில் இன்று மட்டும் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி!
Next articleஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 90,632 பேருக்கு கொரோனா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here