ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!!

0
36

ஒரு கிலோ ஒரு ரூபாய்!!! எப்படி கட்டுபடியாகும்!!! வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்!!!

வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் அனைவரும் வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். குறிப்பாக ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் தற்பொழுது கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்றும், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிடக் கோரியும் பல கோரிக்களை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் விவசாயிகள் 39வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மேல் சிந்தாமணி பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாகவே வெண்டைக்காயின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது விவசாயிகளுக்கு வேதனை அளிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

ஒரு கிலோ வெண்டைக்காயை அறுவடை செய்வதற்கு இரண்டு ரூபாய் செலவு ஆகின்றது. இதனால் ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ருபாய்க்கு எடுத்துக் கொள்வது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் பூக்கள், காய்கறிகள் அதிகம் விளையும் பகுதிகளுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்பதற்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்துவதை தடுக்க போலிசார் விவசாயிகளை தடுத்த போதிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன்பு வியாபாரி ஒருவர் டன் கணக்கில் உள்ள வெண்டைக்காய்களை மூட்டை மூட்டையாக ஆற்றில் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது குறிப்படித்தக்கது.