காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!!

0
40
A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!
A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.

இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது. பிறகு அடுத்து 24  மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர இருக்கிறது.

இதனால் பலத்த காற்று வீசி மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45  லிருந்து 65  கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும்,

வடக்கு ஒடிசா கடற்கரையில் மணிக்கு 40-50  கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது. அடுத்த 24  ,மணி நேரங்களில் ஒடிசாவில் சுந்தர்கர், ஜார்சுகுடா, பர்கர், சமாள்பூர், தியோகர், அங்குள், கியோன்ஜர், சோன்பூர், பெளத, பலன்கிர், நுவாபாடா, கலஹண்டி, கந்தமால் ஆகிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும்.

மேலும், மயூர்பஞ், பாலசூர், தேன்கனல், கட்டாக், நாயக்கர் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். நாடு முழவதும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 31.59  சென்டி மீட்டர் மழையும், தென்மேற்கு பருவமழை 13  சதவிகிதமாகவும் பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
CineDesk