மக்களே உஷார்!! வீடியோ கால் மூலம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!!

0
44
People beware!! Money fraud through video call cybercrime police alert!!
People beware!! Money fraud through video call cybercrime police alert!!

மக்களே உஷார்!! வீடியோ கால் மூலம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!!

தினமும் பத்திரிக்கைகளிலும், ஊடங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான மோசடி சம்பவங்களை பார்த்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் இது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி நம்மிடம் உள்ள பணத்தை திருடி செல்வது, ஏடிஎம் கார்டு தருவதாக கூறி அனைத்து பணத்தையும் மோசடி செய்துவிட்டு நம் இணைப்பை துண்டித்து விடுவது என்று பல்வேறு வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் தற்போது புதுவித மோசடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமண வரன் இணையதளத்தின் மூலமாக ஒரு பெண்ணிடம் ஒரு நபர் அறிமுகமாகி உள்ளார்.

பெங்களூர்ல ஐடி பொறியாளராக வேலை பார்க்கும் இவர் அந்த பெண்ணிடம் ரூபாய் 1.14  கோடியை இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அந்த நபரிடம் அப்பெண் வீடியோ காலில் பேசியதை பதிவு செய்து அதை வைத்து மிரட்டி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த நபர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனால் இவரின் வங்கி கணக்கில் இருந்த 84  லட்சத்தை வங்கி முடக்கி உள்ளது. எனவே, இந்த புகாரின் பேரில் அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

எனவே, ஆன்லைனில் இவ்வாறு தெரியாத நபர்களுடன் பேசி பணத்தை இழக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

author avatar
CineDesk