திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

0
181
#image_title

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

தர்மபுரி, திருட்டு வழக்கில், கடந்த 32 ஆண்களாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டவர், சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்ராஜ் (எ) அப்ரோஸ் (53) என்பவரை ஒயர் திருட்டு வழக்கில் தர்மபுரி டவுன் போலீசார் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். இதனையடுத்து தர்மபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவானார்.

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அரசம்பட்டியைச் சேர்ந்தவர். அப்ராஜை கடந்த 32 ஆண்டுகளாக போலிசார் தேடி வந்தனர். இவர் தர்மபுரியில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் ஒயர் திருட்டு வழக்கில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அப்ராஜ் சேலம் லைன்மேடு பகுதியில் பதுங்கி இருந்தது தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமிக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர் தலைமையிலான தனிப்படை போலீசார் செல்போன் பேச்சை டிரேஸ் செய்து சேலம் லைன்மேட்டில் பதுங்கியிருந்த அப்ராஜை நேற்று கைது செய்தனர்.

32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்ராஜை நேற்று கைது செய்து தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் செய்தவர்கள் எத்தனை ஆண்டுகள் தலைமறைவாக இருந்தாலும் ஒருநாள் நீதிக்கு முன் பதில் சொல்லியே  ஆகவேண்டும் என்பதற்கு இந்த கைது ஒரு உதாரணமாகியுள்ளது குறிப்பிடதக்கது.

author avatar
Savitha