பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!..

0
115
A twin student who went to school! A student died!..Parents in shock!..
A twin student who went to school! A student died!..Parents in shock!..

பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!..

கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி  கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய  மனைவி லட்சுமி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

அகிலா இவருடைய வயது 16 இவர் மேல் பூசணி குளிப்பாட்டியைச் சேர்ந்தவர் ரூபிகா வயது 16 இவர்கள் இரண்டு பேரும் முள்ளிக்குறிச்சியிலுள்ள ஜி.டி.ஆர் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தனர். அகிலா மற்றும் ரூபிகா தங்கள் பள்ளிக்கு கொல்லிமலையில் இருந்து ராசிபுரத்துக்கு அரசு பேருந்தில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் காலை அவர்கள் இரண்டு பேரும்  வழக்கம்போல் செல்லும் அரசு பேருந்தை தவறவிட்டன. பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் இருவரும் கொல்லிமலையில் இருந்து முள்ளிக்குறிச்சி நோக்கி சென்ற ஒரு மினி லாரியின் பின்னால் அமர்ந்து சென்றனர். மினி லாரியை கொல்லிமலை சித்தூர் நாடு ஊராட்சி நரியன் காடு பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த மினி லாரியின் மேல் பூசணிகுழிப்பட்டி  பேருந்து நிறுத்தத்தை அடுத்த வளைவில் திரும்பியது. அப்போது அதில் அமர்ந்திருந்த அகிலா மற்றும் ரூபிகா நிலை தடுமாறி சாலையில் தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்கள் இரண்டு பேரும் பலத்த படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் வேகமாக ஓடி வந்து கீழே விழுந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

. அகிலா சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் ரூபிகா ராசிபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி அங்குள்ள மலைவாழ் மக்கள் விபத்து நடந்த இடத்திலேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களிடம் அதிகாரிகள் நம்பிக்கையான பேச்சு வார்த்தைகளை நடத்தி மேலும் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துச் சென்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து  செங்கரை போலீசார் டிரைவர் சிவப்பிரகாசம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே  சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அகிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் மலைவாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K