காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர்!!

0
129
#image_title

காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர். பிஹாரில் கைது செய்த காவல்துறை.

திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாக 40 வயதான ஹேமந்த் குமார் ரகு என்ற இளைஞர் துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

துபாயில் பணியாற்றி வந்த போது அங்குள்ள இரவு நேர விடுதியில் நடனமாடி வந்த பிஹாரை சேர்ந்த பெண்ணுடன் ஹேமந்த் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இரவு நேர விடுதியில் பார்த்து வந்த டான்ஸர் வேலையை விட்டு விடுமாறு ஹேமந்த் குமார் வற்புறுத்தியுள்ளார்.

அந்தப் பெண்ணும் தனது டான்சர் வேலையை விட்டுவிட, துபாயில் தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு தனது காதலியுடன் பிஹார் திரும்பியுள்ளார் ஹேமந்த்.

பிஹாரில் உள்ள ஃமுஸாப்பர்பூர் காதலியுடன் தங்கி இருந்தபோது 15 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்த மொத்த சேமிப்பையும் செலவழித்த ஹேமந்த் தனது காதலியை மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்க குற்றவாளிகளுடன் இணைந்து திருட துவங்கியுள்ளார்.

பிஹார் மாநிலம் முஸாஃபர் நகர் குற்ற நெட்வொர்க் உடன் இணைந்து தனது இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹேமந்த்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சாந்தி தேவி என்ற பெண்ணிடம் ரூ.2.25 லட்சம் கொள்ளியடிக்கப்பட்ட வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த போது மதோப்பூர் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பதுங்கி இருந்த ஹேமந்த் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் பொறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

ஹேமந்த் குமார் ரகு மற்றும் அவரது கூட்டாளிடமிருந்து ரூ.51,000 பணம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், திருடப்பட்ட இரண்டு பைக்குகள், லேப் டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பெண்ணின் மீது இருந்த பைத்தியக்காரத்தனமான காதலின் காரணமாக பன்னாட்டு நிறுவனத்தில் செய்து வந்த வேலையை உதறி விட்டு திருடனாக மாறிய ஹேமந்த் தற்போது சிறைக்குப் பின்னால் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

author avatar
Savitha