பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்… காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி!!

0
29

 

பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும்… காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய டிஜிபி…

 

பஞ்சாங்கத்தின் படி செயல்பட வேண்டும் என்று காவலர்களுக்கு உத்திரப்பிரதேச மாநில டிஜிபி அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இந்துக்கள் அனைவரும் பஞ்சாங்கம் என்ற ஒரு நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். அதில் கூறப்பட்டிருக்கும் நேரங்களை நல்ல மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். தற்பொழுது அதே போல உத்திரப்பிரதேச மாநில டிஜிபி அவர்கள் காவலர்களுக்கு பஞ்சாங்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார்.

 

உத்திரப்பிரதேச மாநில டிஜிபி விஜயகுமார் அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் வெளியிட்டுள்ள சுற்றரிக்கையில் “அமாவாசை நாளில் நடக்கும் குற்ற நிகழ்வுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அமாவாசை நாளுக்கு முந்தைய நாளில் குற்றங்கள் ஏற்படாதவாறு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

பொதுவாக அமாவாசை நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பும், அமாவாசை நாளுக்கு பின்னர் சில நாட்களுக்கு பிறகும் தான் அதிக குற்றங்கள் நடக்கின்றது. அதனால் அமாவாசை நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

 

பௌர்ணமி வரும் நாட்களில் ஒரு வாரம் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இதனால் குற்றவாளிகளின் நடமாட்டம் குறைவாக இருக்கும். அதுவே அமாவாசை நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிச்சம் குறையத் தொடங்கும். அமாவாசை நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வெளிச்சம் குறைவாக இருக்கும். எனவே அமாவாசை வரும் நாட்களை மட்டும் கருத்தில் கொண்டு காவலர்கள் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். மேலும் குற்றங்களை தடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

காவலர்களுக்கு மட்டுமில்லாமல் டிஜிபி விஜயகுமார் அவர்கள் சார்பில் பொதுமக்களுக்கும் ஒரு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்களும் அமாவாசை நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரும், அமாவாசை முடிந்து சில.நாட்கள் கழிந்தும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

 

மிகப் பெரிய கொலை மற்றும் கொள்ளை கும்பல்கள் அமாவாசை நாளையே தேர்ந்தெடுத்து குற்றங்களை செய்வார்கள் என்றும் டிஜிபி விஜயகுமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 

டிஜிபி விஜயகுமார் அவர்களின் இந்த நடவடிக்கை பற்றி முன்னாள் காவல் அதிகாரிகள் “இது மிகவும் பழமையான நடைமுறை ஆகும். முன்பு எல்லாம் அமாவாசை தினத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை சார்பில் காலண்டர் வெளியிடப்படும். மேலும் அமாவாசை தினங்களில் காவலர்ஙளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.