பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு காரணம் இவர்தான்..செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான் புகழாரம்!!

0
38

பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு காரணம் இவர்தான்..செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான் புகழாரம்!!

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.செஸ் விளையாட்டு தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவுடன் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தின் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா அரை இறுதி போட்டியில் மோதினார்.இதில் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டம் சமநிலையில் முடிந்தது.இதனால் டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது.இருவரும் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமென்ற முனைப்பில் விளையாட தொடங்கினர்.இதில் ஆட்ட தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.இதனால் உலக செஸ் தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு இவர் முன்னேறி இருக்கின்றார்.இதனை தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியாவின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா அடைந்துள்ளார்.

இறுதி போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் இவர் மோத இருக்கின்றார்.இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து செய்தி குவிந்து வருகின்றது.இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் செஸ் ஜாம்பவான் ‘கேரி காஸ்பரோவ்’ வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் “பிரக்ஞானந்தாவுக்கும் அவரது தாயாருக்கும் வாழ்த்துகள். என் அம்மா எனது அத்தனை போட்டிகளிலும் என்னுடன் வந்திருக்கிறார் என்ற முறையில் சொல்கிறேன்.தாயின் துணை மிகச் சிறப்பானது. சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர் நியூயார்க் கவ்பாய்ஸ் இருவரை வீழ்த்தியுள்ளார்.மிகச் சிக்கலான தருணங்களிலும் கூட பிரக்ஞானந்தா திடமாக இருந்துள்ளார்” என்று பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அவரது அம்மாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.கேரி காஸ்பரோவ் 1990 கால கட்டங்களில் செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த ரஷ்ய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.