அதிமுகவிடம் உதவி கேட்டு கெஞ்சிய பிரபல நடிகர் குண்டு கல்யாணம்.!!

0
120

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என தனக்கென தனி அடையாளத்தோடு ரசிகர்களால் கண்டறியப்பட்டவர் குண்டுகல்யாணம்.

இவர் 1967ம் ஆண்டு தமிழ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நகைச்சுவை நடிப்பு மற்றும் உடல் தோற்றம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து. அதன்மூலம், இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

அதன் பிறகு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

இவர் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். திமுகவின் தலைமை கழக பேச்சாளர் ஆக பதவி வகித்தவர் நடிகர் குண்டு கல்யாணம். இவர் தற்போது சிறுநீரக பிரச்சினைகள் அவதிப்படுவதாகவும், அதற்கான சிகிச்சை எடுக்க கூட பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

இதனையடுத்து பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுகவில் நான் மறைந்த தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து தொண்டனாக இருந்து வருகிறேன். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே நான் அவரது தீவிர விசுவாசி, அதன் பிறகு, நான் கட்சியின் தலைமை கழக பேச்சாளராக பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். கட்சியில் 50 வருடங்களாக இருந்து வருகிறேன். கட்சிக்காக நான் ஏறாத மேடை இல்லை ஆனால், தற்போது வயது காரணமாக சிறுநீர் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவருகிறேன்.

இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வாரம் இரண்டு முறை இதற்காக சென்று டயாலிசிஸ் செய்து வருகிறேன. டயாலிஸிஸ்கான செலவு பொதுவாகவே அதிகம் என்பதால் பொருளாதார நெருக்கடியால், அதனை சமாளிக்க முடியாத சூழலில் உள்ளேன். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கும் பல லட்சம் ரூபாய் செலவாகும் அதற்கான பொருளாதாரம் என்னிடம் இல்லை என் மகள் தான் என்னை பார்த்துக் கொள்கிறார். அவரிடம் இதற்கான பண வசதி இல்லை. பொருள் உதவி கேட்டு நானும் தலைமைக்கு நிறையவே கடிதம் எழுதிவிட்டேன். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை எழுதி எழுதி எனது லெட்டர் பேட் தேய்ந்தது தான் மிச்சம் எனது குரலை கட்சியினர் யாரும் செவி கொடுத்து கேட்கவில்லை.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் அவ்வப்போது பொருளுதவி செய்து வந்தார். அவர் தவிர வேறு யாரும் முன் வரவில்லை 50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்த நபரை ஒதுக்கிவிட்டனர். ஒருவேளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கட்சியின் விசுவாசியான எனக்கு உடனடியாக உதவி இருப்பார் என மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.