44 வயதில் நடிகை நக்மாவிற்கு திருமணமா? சமீபத்தில் வெளியான புதிய தகவல்

0
269
Actress Nagma Talks About Her Marriage Plan-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today Breaking News in Tamil
Actress Nagma Talks About Her Marriage Plan-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today Breaking News in Tamil

1990 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இந்தி நடிகை நக்மா ஆரம்பத்தில் பிரபுதேவாவுடன் நடித்த காதலன் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த பாட்ஷா படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நக்மாவிற்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.நக்மா முன்னணி நடிகர்களுடன் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியை தந்தன.இதனால் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் நக்மாவும் ஒருவர்.

நடிகை என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை என்பது அனைவரும் அறிவர். அந்த வகையில் நடிகை நக்மாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த காலகட்டத்தில் நக்மாவுடன் இணைந்து நடித்த பிரபுதேவா மற்றும் சரத்குமார் ,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஒரு போஜ்புரி நடிகர், இந்தி நடிகர் என நிறைய பேருடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் இவர்களுடன் திருமணம் நடந்ததாகக் கூட பல்வேறு சமயங்களில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் நடிகை நக்மாவோ அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியவர் அதன்பிறகு  விதவிதமான அவதாரங்களில் செயல்பட்டு வந்தார். சில காலம் போஜ்புரி மொழிப்படங்களில் நடித்தவர், பின்பு கிறிஸ்தவ மத போதகராகவும் செயல்பட்டு வந்தார். இதன் பிறகு அரசியலில் நுழைந்த நக்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

நடிகை நக்மா அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவை விட்டு நீண்டகாலமாக விலகியே இருந்தார். அரசியலில் அந்த அளவிற்கு பலன் கிடைக்காததால் தற்போது மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு படத்தின் பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அவரது திருமணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த நக்மா, நான் திருமணம் செய்துகொள்வதற்கான நேரம் கண்டிப்பாக வரும். 44 வயதை கடந்துவிட்டாலும் நான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என நக்மா உறுதியாக கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் பெரும்பாலான நடிகைகள் வயதை வெளிப்படையாக கூறுவதை தவிர்ப்பார்கள் ஆனால் நடிகை நக்மாவோ தனது வயதை அறிவித்ததோடு அல்லாமல் திருமணமும் செய்து கொள்வதாக கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.