அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே…

0
147
#image_title
அடேங்கப்பா… வெற்றிலையில் இவ்வளவு நன்மை நிறைந்திருக்கா? இது தெரியாம போச்சே…

நம் இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலையின் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலைகள் திருமண விழாக்கள், மத வழிபாடு நிகழ்ச்சிகள், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்திய கலாச்சாரத்தில், எந்தவொரு திருமண விழாவிலும் விருந்தினர்களுக்கு வெற்றிலை வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு வெற்றிலை நன்மை தரக்கூடியது.

பல காலங்களாக நம் முன்னோர்கள் மதிய உணவிற்குப் பிறகு, வெற்றிலைப் போடுவது வழக்கமாக வைத்து வந்தனர். ஆனால், தற்போது அந்த பழக்கம் மாறிவிட்டது. அனைவரையும் வெற்றிலையின் அவசியத்தை மறந்து விட்டனர். வெற்றிலையில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மேலும், வெற்றிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, அயோடின், பொட்டாசியம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

வெற்றிலையின் நன்மை குறித்து பார்ப்போம் –

வெற்றிலையில் மிளகு வைத்து நாம் சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறையும்.

கொழுந்து வெற்றிலையில் மிளகு வைத்து மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

வெற்றிலையை நாம் சாப்பிட்டு வர, நம் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறும்.

வெற்றிலைகளை தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பைக் குடல் வலி நீக்கி குணம் அடையும்.

வெற்றிலையை மெல்லுவதால் அதில் உள்ள காஸ்ட்ரிக்  அமிலத்தின் தீய தாக்கங்களிலிருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும்.

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால், வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். வாய் துர்நாற்றம் அகலும்.

வெற்றிலை சாப்பிட்டால் வயிற்றில் இருந்து நச்சுக்கள் வெறியேறி குடல்கள் சுத்தமாகும்.

ஆண்மை குறைவு பிரச்சினை உள்ளவர்கள், தினந்தோறும் 2 முறை வெற்றிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

வெற்றிலை சாப்பிட்டால், இரத்த நாளங்களை சீரமைத்து, ஆண்மை குறைப்பாட்டை சரி செய்யும்.

வெற்றிலையை சாப்பிட்டால், மூட்டு வலி சரியாகும். மேலும், வெற்றிலையை அரைத்து, அதன் சாற்றை மூட்டு வலி இருக்கும் இடத்தில் தடவினால் மூட்டு வலி பறந்து போகும்.

author avatar
Gayathri