சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

0
36
#image_title

சோம்பலை முறிக்க குடிக்கும் டீ!!! டீயில் இந்த நன்மைகளும் உள்ளதா!!!

நம்மில் பெரும்பாலும் நமக்கு ஏற்படும் சோம்பலை போக்க டீ, காபி போன்றவற்றை குடிப்போம். இதில் என்ன நன்மைகள் உள்ளது என்ன தீமைகள் உள்ளது என்பது பற்றி தெரியாமல் நாம் குடித்து வருகிறோம்.

டீ, காபியில் அதிகபட்சம் நபர்களால் டீ தான் விரும்பி குடிக்கப்படுகின்றது. இந்த டீ யில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நன்மைகளை தருகின்றது. ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இந்த டீயை நாம் குடிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…

* மன அழுத்தம் அதிகம் உள்ள நேரங்களில் டீ குடிப்பதால் பதற்றத்தை தணிக்க உதவுகின்றது.

* டீயில் ஃவுளூரைடுகள் மற்றும் டானின்கள் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை நமது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.

* தேநீரை சர்க்கரை இல்லாமல் குடிக்கும் பொழுது அவை நம் பற்களுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது.

* டீ குடிப்பதால் இவை தினசரி திரவ உட்கொள்ளுதலுக்கு பங்கு அளிக்கின்றது. மேலும் உடலில் நீரோட்டத்தை அளிக்கின்றது.

* டீயில் கேடசின்கள் மற்றும் காஃபின் போன்றவை உள்ளடங்கி இருக்கின்றது. இவை உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது.

* டீயை குடிப்பதால் நமது உடல் எடையின் மேலாண்மைக்கு உதவி செய்கின்றது.

* இஞ்சி, மிளகு, சுக்கு போன்ற மூலிகை டீ வகைகளை குடிப்பதால் செரிமாணம் மேம்படுகின்றது.

* மூலிகை டீ குடிப்பதால் அஜீரணம், வீக்கம், குமட்டல் போன்றவற்றை குறைக்க உதவி செய்கின்றது.

* மூலிகை டீ குடிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

* தேயிலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் இருக்கின்றது. இவை நம் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.

* டீ குடிப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மேலும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.

* டீயில் காஃபின் உள்ளது. இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செறிவு, கவனம் ஆகியவற்றை மேம்படுத்தவும், நாள் முழுவதும் மனதளவில் கூர்மையாக இருக்கவும் உதவி செய்கின்றது.