25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இன்று நடைபெறும் இன்டர் போல் பொதுச் சபை கூட்டம்! பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்!

0
78

இன்டர் போல் எனப்படும் சர்வேச காவல் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் இன்று புது டெல்லியில் ஆரம்பமாகிறது அதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

சர்வதேச அளவில் காவல்துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது இன்டர்போல் அமைப்பு ஐரோப்பிய நாடான பிரான்சின் லியோன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் பொதுச் சபை கூட்டம் டெல்லியில் இன்று ஆரம்பமாகி 21ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது இந்தியாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது கடைசியாக 1997 ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்த கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த சமயத்தில் இந்தக் கூட்டம் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.

புதுடில்லியின் பிரகதி மைதான் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் இந்த கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார் இந்த கூட்டத்தில் 195 நாடுகளின் மத்திய காவல் அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் என்று 2000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சார்பாக இந்த அமைப்பில் சிபிஐ இடம் பெற்றுள்ளது. இன்டர்போல் பொது சபை கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிபிஐ கவனித்து வருகிறது.

இதற்கு நடுவே இன்டர் போல் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மத்திய காவல்துறை அமைப்பைச் சார்ந்த குழுவினர் பங்கேற்க வருகை தர உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.