பெற்றோர் இறந்தபின் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு வேலை! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
178
After the death of the parents, the government job for the heirs on the basis of mercy! Action order issued by the High Court!
After the death of the parents, the government job for the heirs on the basis of mercy! Action order issued by the High Court!

பெற்றோர் இறந்தபின் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு வேலை! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம்  சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண்  உடல் நலக் குறைவால் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதனை அடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என அவருடைய மகள் சரஸ்வதி அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த விண்ணப்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பித்துள்ளதாக கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தனி நீதிபதி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போது திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமை இல்லை என கூறி வழக்கை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் திலகவதி அமர்வு சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரி விண்ணப்பிக்க எந்த காலம் வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை எனவே திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கர்நாடகா அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை சுட்டிக்காட்டி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது. மேலும் மனுதாரரின் கல்வி தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
Parthipan K