தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

0
128
#image_title

பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கண்டனம். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறுகையில்.

தமிழக நிதி அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக வந்த ஆடியோ வெளிவந்துள்ள நிலையில், ஊழலை வித்திடுகின்ற செயலாக திமுக ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு தமிழக முதல்வர் எந்த பதிலும் கூறாமல் இருப்பது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் அதன் அடிப்படையில் தற்போது மக்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை துவக்கி உள்ளோம் என தெரிவித்த தம்பிதுரை, பாஜக-அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகள் கேட்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,

கேட்பது அவர்கள் உரிமை, 40 தொகுதிகளை கூட கேட்கலாம் ஆனால் எத்தனை தர வேண்டும் என முடிவு செய்வது அதிமுக தான் என தெரிவித்தார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது ஷிமோகாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் கர்நாடக மாநில பாடல் ஒழிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தம்பிதுரை, இதுபோன்ற செயல் நடந்திருக்கக் கூடாது, இது தமிழர்களுக்கு ஒரு துயரமான செய்தி என தெரிவித்தார்.

author avatar
Savitha