அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!!

0
151
#image_title
அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!
நேற்று அதாவது மே 24ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் அவர்களின் அதிரடியான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நேற்று அதாவது மே 24ம் தேதி சென்னையித் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ண்ட்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 41 ரன்கள் சேர்த்தார். சூரியக்குமார் யாதவ் 33 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும், நேஹால் வதேரா 23 ரன்களும் சேர்த்தனர். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசி நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யாஷ் தக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
183 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரேராக் மான்கட் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் மேயர்ஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லக்னோ அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஷ் ஸ்டோய்னஸ் நிதானமாக விளையாடி ரன் சேர்க்க மறுபுறம் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் அவர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ல்கனோ அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் மார்கஷ் ஸ்டோய்னஸ் 40 ரன்களும், கெய்ல் மேயர்ஸ் 18 ரன்களும் தீபக் ஹூடா 16 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற காரணமாக இருந்த ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
எலிமினேட்டர் சுற்றில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 26ம் தேதி அஹமதாபாத்தில் நடக்கும் இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.