பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!!

0
33

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!!

தற்போது அனைவரிடமும் பான் கார்டு வந்துள்ளது. பான் கார்டு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரிடமும் இந்த பான் கார்டு ஆனது எப்பொழுதும் இருந்த வண்ணமே இருக்கிறது. எனவே அடுத்தவர்கள் பான் கார்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டையே நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். இந்த பான் கார்டை வைத்து நம்முடைய வங்கி முகவரிகள், நாம் எவ்வளவு ஊதியம் வாங்குகிறோம், இன்சூரன்ஸ் கட்டி இருக்கிறோமா இல்லையா, என அனைத்து முகவரிகளையும் இந்த பான் கார்டு வைத்து கண்டுபிடித்து விடலாம்.

இவ்வாறு இந்த முகவரிகளை அனைத்தும் கண்டுபிடித்து நமக்கே தெரியாமல் நம் வங்கியில் லோன் வாங்க முடியும். கிரெடிட் கார்டு வாங்க முடியும் மேலும் அந்த பணத்தை கட்டாமலும் விட்டு விடுவார்கள்.

இது போன்ற சம்பவம் கடந்த ஆண்டு ஹிந்தி நடிகரான ராஜ்குமாருக்கு நடந்தது. மேலும் நமது பான் கார்டை பயன்படுத்தி ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் நிறைய குற்றங்கள் புரிய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு செய்யும்போது காவல்துறையினர் விசாரிப்பில் அது நம் பான் கார்டு என்று தெரிந்தவுடன் குற்றம் நம்மீது சுமத்தப்படும்.

எனவே நம் பான் கார்டை யாராவது உபயோகப்படுத்தி லோன் வாங்கி இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு முறை உள்ளது. அதுதான் சிபில் ஸ்கோர் அதை பயன்படுத்தி அதன் மூலமாக நாம் லோன் வாங்கி இருக்கிறோமா சரியாக ஈஎம்ஐ கட்டி வருகிறோமா என்பதை பார்த்தாலே வேறு யாராவது இதை பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை கண்டறியலாம்.

இந்த சிபில் ஸ்கோரை பார்க்க மொபைலில் ஏதேனும் ஒரு இணையதள முகவரிக்கு சென்று பான் கார்டு பற்றி அனைத்து முகவரிகளையும் கொடுத்து சிபில் ஸ்கோரை பார்க்க கூடாது. இதற்கென்று ஒரு இணையதளம் உள்ளது. அதுதான் myscore.cibil.com என்ற இணையதளத்திற்கு சென்று மெம்பர் லாகின் செய்து அதில் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும்.

பிறகு லாகின் செய்து கிரேட் ரிப்போட்டில் அக்கவுண்ட் இன்ஃபர்மேஷன் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனுள் சென்று பார்த்தல் வங்கியில் நாம் என்னென்ன லோன் வாங்கி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். யாராவது நம்முடைய பெயரில் லோன் வாங்கி இருந்தால் இதை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

ஒருவேளை யாராவது நமது பான் கார்டு வைத்து இப்படி லோன் வாங்கி இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று புகார் அளிக்கலாம். காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து புகார் அளிக்கலாம் அல்லது cybercrime.gov.in. என்ற இணையதளத்திற்கு சென்றும் புகார் அளிக்கலாம் மேலும் 1 9 3 0 என்ற எண்ணிற்கு அழைத்தும் புகார் அளிக்கலாம்.8

author avatar
CineDesk