சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!!

0
41
#image_title

சிக்கன் குனியா நோய்க்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்த அமெரிக்கா! ஒப்புதல் அளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!!

உலகில் முதன் முதலாக சிக்கன் குனியா நோய்க்கு அமெரிக்கா நாடு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

சிக்கன் குனியா வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுக்கள் நம்மை கடிப்பதால் சிக்கன் குனியா நோய் நமக்கு ஏற்படுகின்றது. இந்த சிக்கன் குனியா நோய் உலக அளவில் பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த சிக்கன் குனியா நோயின் அதிக பாதிப்பு ஆப்பரிக்கா, தெற்கு ஆசியா, அமெரிக்காவில் சில பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்துகின்றது.

இந்த சிக்கன் குனியா அதிகம் கொசுக்கள் உள்ள பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த சிக்கன் குனியா நோய் என்பது ஒரு வகையான குடுமையான காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்பொழுது அமெரிக்கா சிக்கன் குனியா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று(நவம்பர்9) அமெரிக்க அரசு “இன்று(நவம்பர்9) நாங்கள் உலகின் முதல் சிக்கன் குனியா நோய்க்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் 18 வயதுக்கு அதிகமானவர்கள் இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் அவர்கள் “இன்று(நவம்பர்9) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சிக்கன் குனியா நோயை கட்டுப்படுத்த உதவும். கடந்த 15 ஆண்டுகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிக்கன் குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கன் குனியா நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது நீண்டகால உடல்நல பாதிப்புகளை நமக்கு கொடுக்கும். சிக்கன் குனியா நோய் வயதானவர்களையும் ஏற்கனவே உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறுவோரையும் அதிகமாக எளிமையாக பாதிக்கும்” என்று கூறினார்.